2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கறுப்புக்கொடிகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த 200 பேர் கைது

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 25 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாள் அரசு முறைப்  பயணமாக  உள்துறை அமைச்சர் அமித் ஷா  நேற்று முன் தினம்(24)  புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

அவரது வருகைக்கு எதிர்ப்புத்  தெரிவித்து மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பல்வறு இயக்கங்கள் கடும் எதிர்ப்புகளைத்  தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் ”திரும்பிப்போ அமித் ஷா!" என்ற கோஷத்தை  முன்வைத்து கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அமித்ஷாவின் உருவபொம்மையை  எரிக்கும் முயற்சியிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், இதனையடுத்து உள்துறை அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற குற்றச்சாட்டில் 200 க்கும் மேற்பட்டோரைப்  பொலிஸார் கைது செய்தனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் இளங்கோ கூறும்போது, "மாநில அரசுக்கு எந்தவித நன்மையும் பயக்காத விதத்தில் அமித்ஷாவின் பயணம் அமைந்துள்ளது. இவரது பயணத்தால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .