2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கலப்பில்லாத திருமணமா?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 07 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

 'இந்தியக் குடியுரிமை பெற்றவர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இடையேயான ஓரினத் திருமணம் செல்லுபடியாகுமா; அவருக்கு இந்தியக்குடியுரிமை வழங்க முடியுமா' என, பதிலளிக்கும்படி, மத்திய அரசாங்கத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஓரினத் திருமணத்துக்கு நம் நாட்டு சட்டங்கள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்திய சட்டங்களின்படி, தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க கோரி ஓரினச் சேர்க்கையாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள பல வழக்குகள்  நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் பணியாற்றும், ஓ.சி.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் அந்தஸ்து பெற்றுள்ள ஜொய்தீப் சென்குப்தா, அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் பிளைன் ஸ்டீபன்ஸ், ஓரினத் திருமணம் செய்துள்ளனர்.

தற்போது ஸ்டீபன்ஸ்க்கு, ஓ.சி.ஐ., அந்தஸ்து அளிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 20 ஆண்டுகளாக பழகி வந்த சென்குப்தா மற்றும் ஸ்டீபன்ஸ்,ஓரினத் திருமணம் செய்துள்ளனர். அந்தத் திருமணத்தை அமெரிக்க சட்டம் அங்கீகரித்துள்ளது.

தற்போது தங்கள் முதல் குழந்தை பிறப்பதற்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X