2025 ஜூலை 30, புதன்கிழமை

கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் ; பரிதவிக்கும் குழந்தைகள்

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலம், சுகேலாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராம். இவரது மனைவி சுசிலா தேவி. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முத்துராம் மும்பையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருவதால், பெரும்பாலும் மும்பையிலேயே தங்கியிருப்பார்.

இந்தச் சூழ்நிலையில்,  வினோத் ராம் என்ற திருமணமாகாத வாலிபருடன் சுசிலா தேவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக கள்ளத்தொடர்பில் இருந்துவந்த இவர்கள், செவ்வாய்க்கிழமை (31) இரவு ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.

சுசிலா தேவியின் வீட்டுக்குள் வினோத் ராம் நுழைந்தபின்னர்,  அவர்கள் இருவரும் வீட்டின் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்திருக்கிறார்கள்.

வெகு நேரமாகியும் கதவை திறக்காத நிலையில், ஊர் மக்கள், இருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய அடித்துஇ உதைத்தனர். 

விடிந்ததும் சுசிலா தேவியின் கழுத்தில் வினோத் ராமை தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் ராம் குடும்பத்தினர் முன்னிலையில்,  இந்த திருமணம் நடந்துள்ளது. 

அதன்பின்னர் இருவரையும் ஊரை விட்டு வெளியேற்றினர். சுசீலா தேவி, தனது கள்ளக்காதலனுடன் சென்றதால் அவரது மூன்று குழந்தைகளும்  நிர்க்கதியாகத் தவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .