2025 ஜூலை 19, சனிக்கிழமை

கழிவறையில் சமையல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 மே 29 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உணவகமொன்றில் உள்ள   கழிவறையில் ஊழியர்கள்  சிலர்   பிரியாணி அரிசியை அலசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள  பிரபல உணவகமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த உணவகத்திற்கு வழங்கப்படும்  தண்ணீர்  விநியோகம் தடைப்பட்டமையினாலேயே கழிவறையில் பிரயாணி அரிசியை அலச நேரிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்  ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடவே குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

 இந்நிலையில் குறித்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X