2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கழிவறையை அர்ச்சகரைக் கொண்டு சுத்தம் செய்த அதிகாரி

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 30 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கவயல் :

பங்காரு திருப்பதி கோவில் கழிவறையை, அர்ச்சகரை வைத்துச் சுத்தம் செய்த அதிகாரி மீது தாலுகா அர்ச்சகர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் தீக் ஷித் புகார் செய்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 

 

இக்கோவிலில் செயல் அதிகாரியாக சுப்ரமணியம், மூன்றரை ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.கோவில் அர்ச்சகரொருவரை, 'கழிப்பறையை துப்புரவு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் சம்பளம். இல்லையேல் வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை' என அந்த அதிகாரி கூறி உள்ளார். இது குறித்து, தாலுகா அர்ச்சகர்கள் சங்கம், அர்ச்சகர்களை மிகவும் கொடுமைப்படுத்தும் சம்பவத்தை புகைப்பட ஆதாரங்களுடன் அரசாங்கத்துக்கு முறைப்பாடு  செய்துள்ளனர்.இதன் மீது முறையான விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டும், என்று ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்துாரிக்கு தெரிய படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X