Freelancer / 2023 ஜூன் 13 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த 3 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் 10 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
நைஜீரியாவில் எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஒகஸ்டில் அந்த கப்பல் எண்ணெயை பெறுவதற்காக நைஜீரிய கப்பலுக்காக காத்திருந்தது.
இந்த நிலையில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்றின் வருகையினால் அச்சமடைந்த ஐடுன் கப்பல் சர்வதேச கடல் எல்லைக்குள் புகுந்தது.
இதனால் எல்லை தாண்டியதாக அந்த கப்பல் நைஜீரிய கடற்படையால் பிடித்து செல்லப்பட்டது.
பின்னர் நைஜீரியாவிலிருந்து எண்ணெயை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த ஜனவரி மாதம் நைஜீரிய உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கப்பலில் வந்த 26 பேரும் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கழிவறை நீரை குடிக்குமாறு நைஜீரிய கடற்படையினர் துன்புறுத்தியதாக சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago