2026 மார்ச் 07, சனிக்கிழமை

காங்கிரஸின் நம்பிக்கையில்லாப் பிரச்சினை தோற்கடிப்பு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 11 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டிகர் :

ஹரியானா சட்டசபையில், பா.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், நேற்று முறியடிக்கப்பட்டது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மொத்தம், 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், தற்போது, 88 பேர் உள்ளனர்.

இதில், பா.ஜ.,வுக்கு, 40 உறுப்பினர்களும் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சிக்கு, 10 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு, 30 உறுப்பினர்களும் உள்ளனர். ஒருவர் சபாநாயகர்.மேலும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,களில், ஐந்து பேர், அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.இது தொடர்பாக, ஹரியானா சட்டசபையில் நேற்று ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

முடிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக, 55 உறுப்பினர்களும், ஆதரவாக, 32 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.இதையடுத்து, எதிர்க் கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் முறியடிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .