2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காங்கிரஸ் உடையும் நிலை?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி:

பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை பஞ்சாப் முதலமைச்சர் அமிரீந்தர்சிங் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் பஞ்சாபில், காங்கிரஸ் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க, காங்கிரஸ் தலைவர் சோனியா அமைத்த மூன்று பேர் அடங்கிய குழு முன் ஏற்கனவே அம்ரீந்தர் சிங் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி சென்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் - எம்.பி., ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசினார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X