Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 01 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவில் இருக்கும் காதலனை சந்திக்க ஆற்றின் வழியாக சட்ட விரோதமாக நீந்தி வந்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மண்டல். இவர் சமூக வலைதளத்தின் வாயிலாக கோல்கட்டாவை சேர்ந்த அபிக் மண்டல் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியா வர முடியாமல் தவித்துள்ளார். காதலனை பார்க்க வேண்டுமென உறுதியாக இருந்த அவர், சுந்தரவனக்காட்டில் இருந்து ஆற்றில் சுமார் ஒரு மணிநேரம் நீந்தியே இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த காரணத்தினால் பொலிஸாரால் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். மேலும் வங்கதேச அதிகாரிகளிடம் கிருஷ்ணா மண்டல் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .