Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 07 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காதலன் மும்பை செல்வதை தடுப்பதற்காக அவரது பையில் வெடிகுண்டு இருப்பதாக பெங்களூர் விமான நிலையத்திற்கு காதலி பொய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை, பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் தொலைபேசி மூலம், மும்பை செல்லும் தனது காதலர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அந்த நபரை தேட ஆரம்பித்தனர். அந்த நபரைக் கண்டுபிடித்ததும். அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர், ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணும் அதே விமான நிலையத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண்ணும் அவரது காதலரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட தயாராக இருந்தனர் என்றும், ஆனால் தனது காதலன் மும்பை செல்வதை அந்த பெண் விரும்பவில்லை. அதனால் தனது காதலனை மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறாமல் தடுக்கவே அப்பெண் விமான நிலையத்திற்கு இவ்வாறு பொய்யான தகவலை வழங்கியுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago