Ilango Bharathy / 2022 மார்ச் 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூரில் காதலன் கண்முன்னே இளம்பெண் ஒருவர் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதியொருவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கையில் ” தனது காதலன் தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் , சம்பவ தினத் தன்று கிஷோர் ,சதீஷ் ஆரீப் ஆகிய மூவர் தனது காதலன் முன்னே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளதாகவும், பின்னர் அதனை வெளியே தெரிவித்தால் குறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிவருதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதியின் புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த பொலிஸார் இது குறித்து மேலதிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
59 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago