Ilango Bharathy / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித். 22 வயதான இவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் செல்வி என்ற 21 வயதான யுவதியைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(18) காதல் ஜோடி இருவரும் செம்பரம்பாக்கத்தில் உள்ள பூங்காவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குன்றத்தூர் அருகே இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி, காதலன் கண் எதிரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே சமயம் படுகாயம் அடைந்த அஜித், அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ”மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற அஜித், பின்னால் அமர்ந்து கொண்டிருந்த காதலியின் முகத்தை பார்த்தபடி ஓட்டிச்சென்றதே விபத்துக்கு காரணம் என” பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago