2025 நவம்பர் 05, புதன்கிழமை

காதலியின் பிணத்துடன் திருமணம்

Janu   / 2025 ஜூன் 17 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச, மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியங்கா மாதேசியா என்ற பெண்ணுடன்  கடந்த 3 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார்.

இது பற்றி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பர் மாதம் 29திகதி  திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சன்னி மற்றும் பிரியங்கா இடையில் ஞாயிற்றுக்கிழமை (15) திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வீட்டுக்கு வந்த பிரியங்கா மாதேசியா   தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்து, பிரியங்கா மாதேசியாவின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் அவளை தனது மனைவியாக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரிடம் கூறி, உள்ளூர் பூசாரி ஒருவரை வரவழைத்து அவர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதியுள்ள நிலையில் குறித்த இளைஞன் தனது காதலியின் குங்குமம் வைத்து மாலை போட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும், சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து திருமண சடங்குகளும் செய்துள்ளார். மேலும் “நான் பிரியங்காவை மிகவும் நேசித்தேன். நாங்கள் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தோம். அவள் இப்போது இல்லை என்றாலும் அவள் என் மனைவியாக வேண்டுமெனறு ஆசைப்பட்டேன்.அதனால் அவரது பிணத்துக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டேன்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X