Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில்கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘ஷ்ரத்தா‘ என்ற இளம்பெண்ணை ,அவரது காதலன் அஃப்தாப் அமீன் என்பவர் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளமை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சாஹில் கெஹலாட் என்ற நபரு தன்னுடன் இணைந்து வாழ்ந்த காதலியைக் கொன்று அவரது உடலை குளிரூட்டியில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”சாஹில் கெஹலாட் ,இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாலேயே தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளார்.
மேலும் காதலியைக் கொலை செய்த சில மணி நேரத்தில் வேறு பெண்ணை சாஹில் திருமணம் முடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்ட பொலிஸார் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago