2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காதல் பிரிவுக்குக் காப்புறுதி

Ilango Bharathy   / 2023 மார்ச் 21 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் பிரிவினால் ஏற்படும் மனச் சோர்வினைப் போக்க, காதல் ஜோடியொன்று ‘Heatbreak Insurance Fund‘ என்ற காப்புறுத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

‘பிரதீக் ஆர்யன்‘ என்பவரே இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆர்யன் அவரது காதலியுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துள்ளார். குறித்த ஒப்பந்தத்தின் படி, இருவரும் இணைந்து வங்கியில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். மாதம் 500 ரூபாய் அதில் செலுத்தியுள்ளனர். இறுதியில் இவர்கள் பிரிந்தால் யார் ஏமாற்றுகின்றாரோ அவர் அப்பணத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அந்தவகையில் ஆர்யனின் காதலி விட்டுச்சென்றதால் அவருக்கு 25,000 ரூபாய் கிடைத்ததாக அந்தப்  பதிவில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .