A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் சிக்ரி கிராமத்தில், 30 வயது பெண் ஒருவர், தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் டெல்லியில் தங்கியிருந்து வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதேந்திரா என்ற நபர், அந்த பெண்ணின் வீட்டிக்குள் அத்துமீறி நுழைந்து தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி உள்ளார். ஆனால் அந்தப் பெண் ஆசைக்கு இணங்க மறுக்கவே, பலவந்தமாக அவரை அடைய முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிக்க, அந்தப் பெண் கடுமையாக போராடி உள்ளார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதேந்திரா, அந்த பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி உள்ளார். அத்துடன் வயற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வந்து பார்க்கையில், அந்தப் பெண் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
உடனே பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சதேந்திராவை கைது செய்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago