2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காருக்கு அடியில் சிக்கி 10 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட சடலம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங், ஆக்ராவிலிருந்து நொய்டா செல்வதற்காக மதுரா  டோல்கேட்டிற்கு வந்தபோது, அவரது காரின் அடியில் மனித உடல் சிக்கியிருந்ததைக் கண்ட ஊழியர்கள், பொலிஸாருக்கு உடனடியாகத்  தகவல் அளித்தனர்.

இந்நிலையில் காரின் அடியில் சிக்கியிருந்த ஆண் சடலத்தை மீட்டபொலிஸார் , வீரேந்தரிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்ததோடு, ஏற்கனவே விபத்தில் சிக்கி வீதியில் கிடந்த சடலம் தனது காரில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

 அவரது காரில் சிக்கிய உடல் சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனக்  கணித்தபொலிஸார், வழியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .