A.K.M. Ramzy / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் புதிய விசையுடன் அரசியல் சுற்றுப்பயணத்துக்கு வருவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் விறுவிறுப்பாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் அதன் நிமித்தமாக சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் புதிய விசையுடன் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தை தலை நிமிரச் செய்ய 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன். ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோமீற்றர் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன்.
அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின் போது ஆரம்பித்த “பிக்பாஸ் - சீசன் 4” தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும்.
28 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
9 hours ago