2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காலைத் தொட்டு வணங்கியதில் சர்ச்சை!

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 22 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா

தெலுங்கானாவில், முதலமைச்சரின் காலில் கலெக்டர்கள் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராம் ரெட்டி, அருகில் இருந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கால்களை தொட்டு வணங்கினார்.

மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில், முதலமைச்சரின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு வணங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலெக்டர் வெங்கடராம் வெளியிட்ட அறிக்கையில், ''முதலமைச்சர் எனக்கு தந்தையைப் போன்றவர். விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது மாநில கலாசாரம். எனவே, புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசி பெற்றேன்,'' என, விளக்கம் அளித்தார்.

இதேபோல், கமரெட்டி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் சந்திரசேகர ராவின் காலில், கலெக்டர் சரத் விழுந்து வணங்கினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான இவர்கள், முதலமைச்சர் காலில் விழுந்து வணங்கியதற்கு, பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X