Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூலை 05 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கையில் சிகரெட்டுடன் இருக்கும் காளி போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் கூறி, ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காளி வேடமணிந்த ஒரு பெண்ணின் கையில் சிகரெட்டும், LGBTQ சமூகத்தினரின் கொடியும் இருந்தது. இன்னப்பிற கைகளில் தண்டாயிதம் சூலம் இருந்தது. இந்த புகைப்படம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியதாக லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது.
லீனா மணிமேகலை அதிகமாக ஆவணப்படங்களையும், சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ‘மாடத்தி’ எனும் படத்தினையும் எடுத்து வெளியிட்டு இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த ஆவணப்படத்தின் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை கூறும்போது, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தால் என்னை கைது செய்யும் எண்ணத்தை விட்டு லவ் யூ சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘காளி’ திரைப்படம் திரையிடல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு அந்த படத்தை திரையிட்ட நிகழ்ச்சி குழுவினருக்கு ஒட்டாவா இந்திய உயர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, டொராண்டோவில் உள்ள எங்கள் துணைத் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், காளி தேவியை அவமதிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்திய இந்திய உயர் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
‘எனக்கு உடன்பாடில்லை’
மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று 'காளி' போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில் இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நுஷ்ரத் ஜஹானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில் 2020 செப்டம்பரில், துர்கா போல் வேடமணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியதற்காக நுஷ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Jul 2025