2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காவுகொண்ட உடல் நல்லடக்கம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 19 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 'புலிட்சர்' விருது பெற்ற புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லி ஜாமியா பல்கலை வளாகத்திலுள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ரோஹிங்கியா அகதிகளின் அவலம் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் இவருக்கு புலிட்சர் விருதை பெற்றுக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையில் நடந்து வரும் சண்டையை புகைப்படங்களாக எடுக்க சென்ற குழுவில் இடம்பிடித்திருந்தார்.

ஆப்கானின் கந்தகர் பகுதியில் தலிபான் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினருடன் இருந்த சித்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல்   டெல்லிக்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலை டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அதன் துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X