Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 09 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓசூர் :
கணவர் தினமும் குடித்து விட்டு வந்ததால், மகளுக்கு விஷம் கொடுத்து, அதனை தாயும் சாப்பிட்டதில் மகள் பலியான சம்பவம்,
கிருஷ்ணகிரி, புக்கசாகரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கணவன் டிப்பர் சாரதி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் நான்காம் வகுப்பு படித்து வந்தார். தகப்பன் தினமும் மது அருந்திவிட்டு வருவதால், தம்பதிக்குள் குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் , மனைவி இரவு 8;00 மணிக்கு, சாப்பாட்டில் விஷம் கலந்து, மகளுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டார். வீட்டில் மயங்கி கிடந்த மனைவியை மகளையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரச மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகள் உயிரிழந்தார்.
மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை சாப்பிட அழைத்தபோது, சாப்பாடு வேண்டாம் எனக்கூறி, பக்கத்து வீட்டிற்குச் சென்றதால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago