2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

குழந்தையை கூரையில் காயவைத்து சித்திரவதை

Editorial   / 2022 ஜூன் 09 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வயதுப் பெண் குழந்தையின் கைகால்களை கயிற்றில் கட்டி, வீட்டின் கூரையில் கொளுத்தும் வெயிலில் காய வைத்த கொடூர சம்பவம் புதுடெல்லியில் நடந்துள்ளது.

புதுடெல்லியின் வடகிழக்கு பகுதியான காராவால் நகரில் ஒரு வீட்டின் கூரையில், ஐந்து வயது பெண் குழந்தையின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலில் படுத்திருக்கும் காணொளி, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று, குழந்தையை மீட்டனர். விசாரணையில், சித்திரவதைக்குள்ளான குழந்தை, முதலாம் வகுப்பு மாணவி என்பதும், வீட்டு பாடம் எழுதாததால், இப்படி கொடூர தண்டனையை கொடுத்துள்ளது தெரியவந்தது. இது குறித்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .