Freelancer / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பக்டீரியா தொற்றால் ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பால், கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
"ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ கிராம் எடையுடன் 32 வாரத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தீவிர Hydrocephalus என்ற மூளையில் நீர்கசிவு கோளாறு இருந்தது.
இந்த நீர் கசிவை உறிஞ்சி எடுப்பதற்காக, 5 மாத காலமாக VP Shunt என்ற சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, வளர்திறன் குறைபாடு கொண்ட அந்த குழந்தைக்கு, நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த VP Shunt ஆசனவாய் வழியாக வெளியேறிய காரணத்தால், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட பக்டீரியா தொற்றினால், குழந்தையின் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது" என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago