Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 30 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி மாநிலத்தில், தோஷம் நீக்குவதாக கூறி நகைகள் மற்றும் ரூ.12 இலட்சம் வரை பணமோசடியில் ஈடுப்பட்ட சத்தியவதியான பெண் சாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரூ.12 லட்சம் ரொக்கம் மட்டுமன்றி 37 பவுண் நகைகளையும் சுருட்டிவிட்டார். ஆட்டையை போட்டவர் சிக்கியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு 2020ஆம் ஆண்டு சத்தியவதி என்பவர் இரண்டு மகள்களுடன் குடிவந்துள்ளார். அனைவருடன் நட்பாக பழகியுள்ளார். முருகனின் அக்கா உமாமகேஸ்வரி 16 வயதில் இறந்து விட்டார். தனது அக்காவின் புகைப்படத்தை முருகன் வீட்டில் வைத்திருந்தார்.
இதைப்பார்த்த சத்தியவதி உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. தோஷத்தை போக்கினால் தான் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று முருகனின் மனைவி லட்சுமியிடம் கூறியிருக்கிறார்.
வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த தோஷத்தை கழிக்க வேண்டும். ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று முருகனின் தாயார் மற்றும் மனைவி லட்சுமி ஆகியோரிடம் கூறியிருக்கிறார்.
அதன்பிரகாரம் ஆண்கள் இல்லாத நேரத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. வீட்டில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெண்கள் அனைவரையும் ஓர் அறைக்குள் வைத்து பூட்டிய பெண்சாமியார், பணத்தையும் நகைகளையும் திருடிசென்றுள்ளார். அதன்பின்னர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Jul 2025