Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
இந்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசாங்கம் என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டைக் கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கம் பிறந்த தமிழகத்தில் தேசியத்துக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழகம் திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
2019ஆம் ஆண்டு, ஜூலை 19இல் சட்டசபையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழக (திமுக) ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்.
ஒருவேளை அந்தச் சொல்லாததில் 'ஒன்றிய அரசாங்கம் ' என்ற வார்த்தையும் 'ஜெய்ஹிந்த்' என்ற சொல் ஆளுநர் உரையில் இடம் பெறாததால் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது என்ற வாசகமும் அடங்கி உள்ளது போலும். திமுக ஆட்சி தமிழகத்தில் அமைத்ததில் இருந்து மத்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசாங்கம் என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கான காரணத்தைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago