2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கொடிகளை அசைத்து உலக சாதனை; வைரலாகும் புகைப்படம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள  ஜக்திஷ்பூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி `குன்வர் சிங் மன்னரின் 164ஆவது  நினைவு தின நிகழ்சிகள் ` நடைபெற்றன.

 இந்நிகழ்வின் போது  ஒரே நேரத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார் எனவும், இதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் , லாகூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில்  56,000 பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து உலக சாதனை படைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .