2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொரோனா அச்சம்: 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தாய், மகன் மீட்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரோனாப் பரவல் குறித்த அச்சத்தில் அடுக்குமாடிக்  குடியிருப்பொன்றில் தனது 11 வயதான  மகனுடன் தனியாக இருந்த பெண்ணொருவர்  3 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அரியானா மாநிலம் குருகிராம் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் குருகிராம் பொலிஸ் நிலையத்தில் தனது மனைவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 குறித்த புகாரில் ” தான் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறு ஒரு இடத்தில் தங்கிப்  பணிபுரிந்து வருவதாகவும், தனது மனைவி கொரோனா அச்சம் காரணமாக  கடந்த 3 ஆண்டுகளாகத்  தனது மகனுடன்  வீட்டில் அடைந்திருப்பதாகவும்,  தன்னையும் அவர் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை ”எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகனை வெளியே அனுப்பவும் அவர்  மறுப்பதாகவும் ,இதனால் அவர்களுக்கு தேவையான பணம் மற்றும்  மளிகைப் பொருட்களைத்  தானே வாங்கிக் கொடுப்பதாகவும்”அவர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் , குறித்த  பெண்ணையும் அவரது மகனையும் குறித்த குடியிருப்பில் இருந்து  மீட்டு  வைத்தியசாலை அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணின் மன நிலை பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .