A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021-2022ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. சுகாதார கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதார திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.64180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். கொரோனா வைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago