2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொரோனாவால் செயலிழந்தது எலும்பு?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை :

மும்பையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மூன்று நோயாளிகள், எலும்பு திசுக்கள் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களில் பலர், 'மியூகோர்மைகோசிஸ்' எனப்படும், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை உள்ளிட்ட பல நோய்கள் பரவின.இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு, 'அவாஸ்குலர் நெக்ரோசிஸ்' எனப்படும், எலும்பு திசுக்கள் செயலிழக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையில் மூன்று நபர்களின் எலும்பு திசுக்கள் செயலிழந்துள்ளன.

தொடை எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டதை தொடர்ந்து, இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், 40 வயதுக்கு உட்பட்டவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள். கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும், 'ஸ்டீராய்டு' தான், கறுப்பு பூஞ்சைக்கும், இந்த எலும்பு செயலிழப்பு நோய்க்கும் இடையில் உள்ள பொதுவான காரணி என்பது தெரியவந்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X