2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொலை மிரட்டல் விடுத்த சசிகலா மீது வழக்கு

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 01 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் ;

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது பொலிஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சசிகலா பேசியதாக கூறப்படும் குறிப்பிட்ட ஓடியோவில் தனக்கு எதிராக கட்சியினரை அவர் தூண்டி விடுவதாக சி.வி. சண்முகம்பொலிஸாரிடம்  அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.  

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்று கூறினார். "தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்? அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை. இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது," சண்முகம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X