A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா;
கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. 13 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர். இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துப் பகுதிக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 இலட்சம் ஒதுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார். விபத்துப் பகுதியை ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று புகார் கூறிய மம்தா, இதனை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிச் சென்றார்.
இதேவேளை,கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மனோஜ் ஜோஷி பேசும்போது, "தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் வந்துவிட்டனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தனர். தீ விபத்தின் காரணமாக டிக்கெட் முன்பதிவுக்கான இயந்திரம் ஒன்று முழுமையாக சேதமடைந்தது. " எனக் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago