2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கொவிட் ஊரடங்கில் மட்டும் 511 குழந்தை திருமணங்கள்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கொவிட் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் பள்ளிப்படிப்பை தொடராமல் இருந்துள்ளனர். 

இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அதேபோன்று   8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் குழந்தை திருமணத்தை நடத்தியது தெரியவந்தது.

13 வயதே ஆன 8ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும், 9ஆம் வகுப்பு மாணவிகள் 37 பேருக்கும், 10ஆம் வகுப்பு மாணவிகள் 45 பேருக்கும் கொவிட் ஊரடங்கு காலத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

அதேபோல், 11 ஆம் வகுப்பில் 417 மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பில் 2 மாணவிகளுக்கும் என மொத்தம் 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .