2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கோபி மஞ்சூரியனுக்கு தடை

Mithuna   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக   விளங்குகிறது. இந்நிலையில், கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X