A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியுள்ள பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது: எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும்.
அதற்குள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வோம். எங்களது கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம். நெருக்கடிக்கு மத்தியில், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago