2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கோவிலில் கொள்ளையடித்தவர் சம்பவ இடத்திலேயே மரணம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஐதராபாத்தில் கோவில் ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் பாதுகாவலர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் குஷாய்குடா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த கோயிலுக்குக் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் அங்கிருந்த உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இதன்போது அங்கு வந்த பாதுகாவலரான ரங்கையா  தான்வைத்திருந்த கட்டையைக் கொண்டு கொள்ளையனின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .