A.K.M. Ramzy / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் பதுன் மாவட்டத்தில் உகாய்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய அந்த பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றனர். அவர்கள் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கற்பழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கொடூரமாக தாக்கினார்கள். இதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன.
டெல்லி நிர்பயா போலவே இரும்பு கம்பியை செலுத்தி கொடுமைப்படுத்தினார்கள். இதனால் இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை புதருக்குள் போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
கோவிலுக்கு சென்ற பெண் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடினார்கள். அதிகாலையில் அவரை கண்டுபிடித்தனர். சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார்.
பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண் டொக்டர் உட்பட 3 டொக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது.குற்றவாளிகளை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம், டிரைவர் ஜெயபால் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
15 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
50 minute ago