A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை:
சசிகலா சென்னை வந்த பின்பு நிச்சயமாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை அழைப்பார். மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன் என்றார். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பிரசாரத்தை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணி புதூர் பகுதிகளில் தொடங்கி வைத்தார்.
அப்போது கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
1994 இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எங்கள் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து தேவர் இனம் என அரசாணை வெளியிட்டார். அதனை உடனே அமுல்படுத்த வேண்டும். சசிகலா சென்னை வந்த பின்பு நிச்சயமாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை அழைப்பார். மரியாதை நிமித்தமாக அவரை சந்திப்பேன்.
ஜெயலலிதா தான் எங்களுக்கு அரசியல் அங்கிகாரம் அளித்தவர். அதனால் தற்போதைய அ.தி.மு.க. அரசின் கூட்டணி தொடரும். முதலமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் உள்ளதால் எங்களை அழைக்கவில்லை.
எங்களை மட்டுமல்ல மற்ற கூட்டணி கட்சிகளையும் அழைக்கவில்லை.தி.மு.க. தலைவருக்கு வேல் பரிசாக கொடுக்கப்பட்டது தவறான விஷயம் அல்ல. விவசாயிகள் டிராக்டர் பேரணியில் மத்திய அரசுதான் சதி செய்து சீர்குலைத்தது என்று கூறினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago