A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். சச்சினின் இந்த டுவிட்டர்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.
இந்நிலையில், மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு சரத் பவார் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago