Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 24 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலபுரகி மாவட்டம் மலகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சியாமாளா. இவர் தனது வீட்டு அருகில் வரும் ஒரு குரங்கிற்கு உணவளித்து வந்துள்ளார்.
இதனால் குரங்கும், சியாமாளாவுடன் நெருங்கி பழகியது. இதன் காரணமாக அந்த குரங்கு தினமும் சியாமாளா வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தது.
இந்த நிலையில் சியாமாளா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மதியம் திடீரென்று உயிரிழந்தார்.
அவரது உடலை வீட்டில் வைத்திருந்த உறவினர்கள், இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த குரங்கு, அசைவற்ற நிலையில் சியாமாளா கிடப்பதை பார்த்து சோகமானது. தனக்கு உணவளித்து பசி போக்கியவர் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை பார்த்த குரங்கு அருகில் சென்று உற்றுபார்த்தது.
இதை பார்த்த உறவினர்கள் குரங்கை அங்கிருந்து துரத்த முயன்றனர். ஆனால் அந்த குரங்கு அங்கிருந்து நகர்ந்து செல்ல மறுத்தது.
மேலும் சியாமாளாவின் உடலை எடுக்க விடாமலும் பாசப்போராட்டம் நடத்தியது. இந்த பாசப்போராட்டம் நேற்று காலை வரை நீடித்தது. இதனால் இறந்துபோன சியாமாளா உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த முடியாமல் உறவினர்கள் பரிதவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் விரைந்து வந்து, குரங்கை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது பிடித்து செல்லவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறந்துபோன பெண்ணின் உடலை எடுக்கவிடாமல் குரங்கு நடத்தி வரும் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
49 minute ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
28 Jul 2025