A.K.M. Ramzy / 2021 ஜனவரி 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கி றார்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர்.கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை அ.தி.மு.க. குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது. தேர்தல் நெருங்குவதால் பொய்யான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 19வது இடத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
பொது தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகக் கூட வராது என்றார்.
28 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
9 hours ago