A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிடும் என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மதுரை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மதுரைக்குச் சென்ற பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கட்சி தொண்டர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டங்களில் பங்கேற்ற அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசியதாவது:
பாஜக ஆட்சியில் சென்னை திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி செல்லுமிடங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
பாஜக நடத்திய வேல் யாத்திரை இரண்டு வெற்றிகளை தந்துள்ளது. முதலாவது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல் எடுத்தது. மற்றொன்று : தைபூசத்துக்கு தமிழக அரசு பொதுவிடுமுறை வழங்கியது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது என்றார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago