2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி, மனிதநேய மக்கள் கட்சி தனது நிர்வாக அமைப்பை மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களாகப் பிரித்து மண்டலப் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 7-வது மண்டலமாக மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், முழுக்க முழுக்கப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவானதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள பெரு முதலாளிகளின் செல்வத்தை மேலும் உயரவைக்கும் வகையிலான திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்தியாவைப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறக் கூடாது, மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளுநர் எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், சட்டபேரவை உரையிலும் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தைத் தருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .