2025 மே 07, புதன்கிழமை

சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது

Freelancer   / 2024 ஜூலை 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற, ரோஹிங்கியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த அகதிகள் 88 பேரை இரயில்வே பொலிஸார் கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இங்கு பங்களாதேசிலிருந்து சட்டவிரோதமாக பலர் இந்திய எல்லைக்குள் நுழைவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இதை தடுக்கும் நோக்கில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில், சட்டவிரோதமாக நுழைய முயன்ற, ரோஹிங்கியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த 88 அகதிகளை திரிபுரா மற்றும் வடகிழக்கு எல்லை பகுதியில் இரயில்வே பொலிஸார் கைது செய்தனர்.

இது குறித்து இரயில்வே பொலிஸார் கூறுகையில் “ஜூன் மாதத்தில் 47 பேரை கைது செய்தோம். ஜூலை மாதம் இதுவரை 41 பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் பெரும்பாலானோர் சரியான ஆவணங்கள் இல்லாததால், கைது செய்யப்பட்டனர். அகர்தலாவில் பிடிபட்ட அகதிகள் இதுதொடர்பில் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் பல அகதிகளை பிடித்தோம்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X