2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சபரிமலை 16ஆம் திகதி திறப்பு

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 11 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை;

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இம்மாதம் 16ஆம் திகதி மாலை திறக்கப்படுகிறது. ஒன்லைன் முன்பதிவு மூலம் தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறைவான ஊழியர்களுடன் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. ஆடி மாத பூஜைகளுக்காக இம்மாதம் 16ஆம் திகதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இம்மாதம் 17ஆம் திகதி  காலை முதல் தினமும் ஒன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் 5ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். முன்பதிவு இன்று மாலை தொடங்கப்பட உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X