Shanmugan Murugavel / 2021 மார்ச் 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாம் நிர்மாணித்த ஈரானின் சபஹர் பொதுச் சரக்கு துறைமுகத்தில், இவ்வாண்டு மே மாத இறுதியில், முழு நடவடிக்கைகளை ஆரம்பிக்க இந்தியா எதிர்பார்த்துள்ளதாக, இந்தியாவின் கப்பற்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது பிராந்திய வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் என்ற நிலையில், வைரி பாகிஸ்தானைத் தவிர்த்து ஈரானுக்கான, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பொருள்களைக் கொண்டு செல்லும் வழியொன்றாக, ஈரானின் தென்கிழக்கு கரையோரத்தில், ஓமான் வளைகுடாவுடனுள்ள குறித்த துறைமுகத்தின் பகுதியொன்றை இந்தியா அபிவிருத்தி செய்கின்றது.
எனினும், ஈரான் மீதான ஐக்கிய அமெரிக்கத் தடைகளானது துறைமுக அபிரிவிருத்தியைத் தாமதப்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஐ. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழான, ஐ. அமெரிக்க மற்றும் ஈரானின் உறவுகளைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீட்டை முன்னெடுக்க இந்திய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையிலேயே, அடுத்த மாதமோ அல்லது அதற்கடுத்த மாதமோ, முழு நடவடிக்கைகள் ஆரம்பிப்புக்காக ஈரானுக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ் ஷகிட் பெஹெஷ்டி வளாகம் உட்பட துறைமுகத்தில் இரண்டு முனையங்களை இந்தியா அபிவிருத்தி செய்வதுடன், 10 ஆண்டுகளுக்கு முனையத்தை நிர்வகிக்கும்.
அந்தவகையில், கட்டுப்படுத்தப்பட்டளவில் துறைமுகமானது ஏற்கெனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை 123 கப்பல்களையும், 1.8 மில்லியன் தொன்கள் சரக்கையும் சபஹர் துறைமுகம் கையாண்டதாக மாண்டவியா மேலும் கூறியுள்ளார்.
குறித்த எண்ணிக்கையானது தங்களது எதிர்பார்ப்புகளை விட மிகவும் அதிகமெனவும், இது முழுதாக இயங்கினால் சேமிக்கப்படும் சரக்கு குறித்து கனவு காண்பதாக மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago