A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் திட்டத்தில் இருக்கிறார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் டிராபிஃக் ராமசாமியை போட்டியிடக் கோரி, ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு பொதுநல வழக்குக்களை தொடர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பெரிய படை பரிவாரங்களோ, பண பலமோ டிராபிஃக் ராமசாமியிடம் இல்லை. அவரிடம் இருக்கும் சொத்து என்றால் அது மனு எழுதுவதற்கான காகிதங்களும், பேனாக்களும் தான். ஆனால் அப்படியிருந்தும் எதிராளிகளை பல நேரங்களில் விழி பிதுங்க வைத்துள்ளார்.
தனி ஒருவனாக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டிராபிஃக் ராமசாமிக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு உள்ளது. ஆனால் இந்த ஆதரவு வாக்குகளாகாக மாறுமா என்பது கேள்விக்குறி தான். இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிராபிக் ராமசாமியை சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுமாறு அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
32 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
07 Mar 2026