2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாரதிக்கு ஐ.பி.எல் மோகம்: பயணிகள் அலறினர்

Editorial   / 2024 மார்ச் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 9 மணி அளவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சின் சாரதி தனது அலை​பேசியில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்ஸை ஓட்டினார். அவர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை-குஜராத் அணிகள் மோதிய போட்டியை அலைபேசியில் பார்த்துக்கொண்டே அலட்சியமாக ஓட்டியுள்ளார்.

இதனால் அந்த தனியார் பஸ், முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது 2 முறை மோதுவதுபோல் சென்றுள்ளது. இதை பஸ் சாரதியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பயணிகள் பார்த்து கூச்சலிட்டனர். உடனே சாரதி பிரேக் போட்டதால் பஸ், விபத்தில் இருந்து தப்பியது.

 

அதே சமயத்தில் பஸ்சில் இருந்த பயணிகள், தங்களது இருக்கைகளில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சிலர் சாரதியிடம் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அதை ஒரு பொருட்டாக கருதாத சாரதி, தொடர்ந்து தனது அலைபேசியில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் சாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் புகார்கள் சென்றன .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .