2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சலவை இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெல்லியில், ஒன்றரை வயது ஆண்குழந்தையொன்று சலவை இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சம்பவ தினத்தன்று ஆடைகளைத் தோய்ப்பதற்காகக்  குறித்த குழந்தையின்  தாயார் சலவை இயந்திரத்துக்குள் நீரை நிறப்பி அதற்குள் சலவைத் தூளை கலந்துவிட்டு ஆடைகளை எடுப்பதற்காக அறைக்குள் சென்றுள்ளார்.

 இதன் போது குறித்த குழந்தை  அருகில் இருந்த கதிரையின் மீது ஏறி சலவை இயந்திரத்துக்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் வரை அக்குழந்தை சலவை இயந்திரத்துக்குள் இருந்துள்ளதாகவும், இதன்போது சலவைத்தூள் கலக்கப்பட்ட நீரை அக்குழந்தை அருந்தியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த தாயார் உடனடியாகக்  குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இதன்போது குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் குழந்தையின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .