2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சவுக்கடி வாங்கிய முதலமைச்சர்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராய்ப்பூர்

தீபாவளி பண்டிகையின் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படும் கோவர்த்தன் பூஜை விழாவில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்,சவுக்கடி வாங்கிய பின் நடனம் ஆடி கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சத்தீஸ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் இங்கு கோவர்த்தன் பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள, ஜான்ஜ்கிரி என்ற கிராமத்தில் நடந்த கோவர்த்தன பூஜையில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பங்கேற்றார். அப்போது நடன இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தினார். அவரது நடனத்தைக் கிராம மக்கள் மிகவும் ரசித்து மகிழ்ந்தனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தன் வலது கையில் எட்டு சவுக்கடி வாங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .